இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதி ஓவர்களில் ஹசரங்கா வீசிய 19வது ஓவர் நீங்கலாக இலங்கை அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினர். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.