சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.