Categories
உலக செய்திகள்

இந்திய வீரர்கள் தகுந்த பயிற்சி பெறாதவர்கள்…. விமர்சனம் செய்த சுவிஸ் நிறுவன உரிமையாளர்…. நோட்டீஸ் அனுப்பிய இந்திய துப்பாக்கிச்சூடு கூட்டமைப்பு….!!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய போட்டியாளரை விமர்சித்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய துப்பாக்கிச்சூடு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் Manu Bhakerம் பங்கேற்றுள்ளார். இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றவர். மேலும் உலக கோப்பை சர்வதேச துப்பாக்கிச் சூட்டிலும் தங்கம் வென்றவர் ஆவார்.

இதனிடையே ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற போது Manu Bhaker துப்பாக்கி  பழுதானதால் அவரது பயிற்சியாளர் Ronak Pandit துப்பாக்கியின் பழுதை நீக்கி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நேரம் முடிந்து விட்டது என அறிவிக்கப்பட்டதால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் Manu Bhaker  துப்பாக்கியை குறை கூறாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் சுவிஸ் தயாரிப்பான Morini துப்பாக்கி நிறுவனத்தின் உரிமையாளரான Francesco Repich, என்பவர் Manu Bhakerயும், அவரது பயிற்சியாளரையும் விமர்சித்து ஃபேஸ்புக்கில்  பதிவிட்டுள்ளார். அதில் இந்திய வீரர்கள் தகுந்த பயிற்சி பெறாதவர்கள் என்றும் இந்தியர்கள் இப்போது தான் சீனியர் லெவல் போட்டிகளில் பங்கேற்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். மேலும் Manu Bhaker  தனது பயிற்சியாளரிடம் துப்பாக்கியை கொடுத்து சரி செய்ய முயன்றதை விட எங்களிடம் கொடுத்திருந்தால் சீக்கிரம் பழுது நீக்கப்பட்டு போட்டியில் வென்று இருக்கலாம் எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்ககளால் கோபமடைந்த பயிற்சியாளர் பண்டிட் இவர் யார்? என்றும் இவர் ஏன் இவ்வாறு விமர்சனம் செய்கிறார், இவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்றும் கேள்விகளை முன்வைத்தார். இந்நிலையில் இந்திய தேசிய துப்பாக்கிச் சுடும் கூட்டமைப்பு சார்பில் இந்தியா வீராங்கனையையும், பயிற்சியாளரையும் விமர்சித்த துப்பாக்கி நிறுவனத்தின் உரிமையாளரான Francescoக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து Francescoக்கு தனது பதிவுகளை அகற்றினார்.

Categories

Tech |