கட்சியைத் தாண்டி அனைவராலும் மதிக்கபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அண்மையில் தனது 100 வயதை அடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு கண்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் 10 லட்சம் ரூபாய் நிதியைம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவித்ததற்கு தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சங்கரய்யா, தமிழ்நாடு அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது நிதி ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு அரசுக்கே வழங்குவதாக அறிவித்துள்ளார்.