Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டண் : இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி …. அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார் .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , இஸ்ரேல் வீராங்கனையுடன் மோதி 2-0 (21-7, 21-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை நான் யி செங் எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து  21-9, 21-16  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .

Categories

Tech |