பிரபல நடிகை பலமாத உடற்பயிற்சிக்கு பின்னர் தான் உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தான் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் பல மாத உடற்பயிற்சிக்கு பின்னர் தற்போது ஒன்பது கிலோ எடை குறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் சமீரா ரெட்டிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருக்கின்றனர்.