பிரபல நடிகை அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
இதையடுத்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த போதிலும் அவர் திடீரென திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் நடிகை அபிராமி ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கருப்பு நிற டீசர்ட் அணிந்து கிச்சனில் சமையல் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் அபிராமி இந்த வயதிலும் அழகாக இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.