Categories
மாநில செய்திகள்

3,296 ஆசிரியர்களின் தற்காலிக பணி…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… குஷியில் ஆசிரியர்கள்…!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3296 ஆசிரியர்களுக்கு மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3296 ஆசிரியர்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அரசாணையில் தமிழகம் முழுவதும் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் மொத்தம் 2064 பட்டதாரி ஆசிரியர்களும், 344 உடற்பயிற்சி ஆசிரியர்களும் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 888 ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டன. மொத்த 3296 பேர் பள்ளிகளில் தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மேலும் மூன்று ஆண்டுகள் பணியை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது முடிவடைய உள்ளதால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணியை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை பணியில் நீடிப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |