Categories
தேசிய செய்திகள்

மக்களே… குறைந்த ரேட்டில் சொத்து வாங்கலாம்.. சூப்பர் வாய்ப்பு… உடனே ரெடியாகுங்க….!!!

குறைந்த விலையில் சொத்துகளை வாங்க பேங்க் ஆப் பரோடா அரிய வாய்ப்பினை அளித்துள்ளது.

வீடு உள்ளிட்ட சொத்துகளை மிகக்குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஆன்லைன் ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதில் மிக குறைந்த விலையில் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வாங்க முடியும். நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. வீடுகளும் மட்டுமல்லாமல் அலுவலக இடம், நிலம், தொழில்துறை சொத்துக்கள், ஆலைகள் போன்றவையும் ஏலத்திற்கு விடப்படுகின்றது.

சொத்துக்களை வாங்க பேங்க் ஆப் பரோடா வங்கி கடனும் தருகின்றது.எந்தவொரு தகராறுகளும் இல்லாத சொத்துகள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு உறுதி. சொத்துகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த https://www.bankofbaroda.in/property-search.htm Linkஐ கிளிக் செய்து மாநிலம், மாவட்டம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து தெரிந்துகொள்ளலாம். பேங்க் ஆப் பரோடாவிடம் கடன் வாங்கிவிட்டு சரியாக செலுத்தாத தனிநபர், தொழில்களின் சொத்துக்கள் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றது. நாடு முழுவதும் பல்வேறு வகையில் உள்ள பல சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றது. இதில் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலையில் சொத்துகளை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

Categories

Tech |