Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து…. பலரும் படுகாயமடைந்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் மீட்புப்பணி….!!

ஜெர்மனியிலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் லெவர்குசன் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்பு கையால் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Categories

Tech |