ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகளையும், அதனை விற்பனை செத்த 5,360 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.