Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கார்த்தி பட நடிகை… யாருன்னு பாருங்க…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Rashmika Mandanna reveals how COVID got her to Bollywood | Tamil Movie News  - Times of India

இவர் ஜாதி ரத்னலு என்ற தெலுங்கு படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |