புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது ஆன்லைன் ஷாப்பிங் போலவே எளிதாகி விட்டது. முன்னதாக எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்கு உங்களிடம் முகவரி ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எல்பிஜி இணைப்பைப் பெற முடியும், இல்லையெனில் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்காது. சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் எரிவாயு இணைப்பைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது புதிய விதிகள் காரணமாக இந்த கடினங்கள் எளிதாகி விட்டன.
ஆனால் இப்போது நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், அது இனிமேல் இருக்காது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு இருந்தால், நீங்களும் எளிதாக எரிவாயு இணைப்பை பெற முடியும். இதற்காக நீங்கள் எந்த வகையான முகவரி ஆதாரத்தையும் வழங்கத் தேவையில்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கியுள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் இதைப் பெறலாம்.
இந்த வசதியின் கீழ், பெற்றோர், உடன்பிறப்புகள் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு எதாவது உறவினரின் பெயரில் ஏற்கனவே ஒரு கேஸ் சிலிண்டர் இணைப்பு எடுக்கப்படிருந்தால், மற்ற குடும்ப உறுப்பினர்களும் இந்த முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிக்கையாளரின் குடும்பத்தில் எந்த எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் எரிவாயு ஏஜென்சியின் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ, அந்த கேஸ் சிலிண்டர் இணைப்பு நிறுவனத்துக்குச் சென்று எரிவாயு இணைப்பு தொடர்பான ஆவணங்களை கொடுக்க வேண்டும். சரிபார்ப்பிற்குப் பிறகு, புதிய எரிவாயு இணைப்பு கிடைக்கும்.