சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் அடிப்படையில் அனைத்துஇளங்கலை பட்டப் படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல் ஐஎஸ், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை தொலைதூர கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் www.ideunom.ac.in தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய தகுதியுடையவர்கள், மறுகூட்டல் செய்ய விரும்புபவர்களும் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.