நடிகை திரிஷா கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை திரிஷா தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பவர் படத்தின் மூலம் இவர் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதன்பின் இவர் கன்னட படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் திரிஷா கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யூ டர்ன் பட இயக்குனர் பவன் குமார் இயக்கும் இந்த படத்தில் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.