Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பல நாடுகளிலும் விதிக்கப்பட்டதால் மக்களும் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டனர். இதையடுத்து பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வரும் நிலையில் அடுத்ததாக டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த டெல்டா வைரஸால் மீண்டும்  மீண்டும் உலகம் கடும் ஊரடங்கு நிலைமைக்கு  தள்ளப்படலாம் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குரானா வைரஸ் தாக்கம் குறைந்து விட்டதாக உலக நாடுகள் எண்ணவேண்டாம். தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவுகிறது. இங்கிலாந்தில் மருத்துவமனையில் டெல்ட்டா பாதித்தவர்களில் 58.3% பேர் தடுப்பூசி போடாதவர்கள், 22.8 சதவீதம் பேர் அனைத்து தடுப்பூசி டோஸ்களையும் எடுத்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |