ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பலரும் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது . இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு சூதாட்டம் கிடையாது. அது திறமைக்கான விளையாட்டு என மனுதாரர்கள் வாதிட்ட நிலையில் அதன் மூலம் மக்கள் விளையாட்டுக்கு அடிமையாகி தங்களின் பணத்தை இழந்து உள்ளனர் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.