நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று காலை 9:09 மணிக்கு நவரசா ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Categories
Exclusive: சூர்யா, விஜய் சேதுபதி ‘நவரசா’ படத்தின் ட்ரெய்லர்…. வாவ்….!!!!
