ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் ராம்பிரசாத். இவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய 18 வயது மகள் வேறு சாதியைச் சேர்ந்த காதலனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்பிரசாத் தன்னுடைய மகளை பழிவாங்க திட்டம் தீட்டி இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் சென்ற பிறகு தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து சென்ற ராம்பிரசாத் பாவக்கதைகள் திரைப்படம் போல தன்னுடைய மகளை வீட்டிற்கு சமாதானம் செய்து அழைத்து வந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதைப்போல கடந்த வாரம் கர்ப்பிணியாக இருந்த தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய மகளை ஆள் இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனால் கர்ப்பிணியான அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டுள்ளனர். இந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.