Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்.. 43 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு.. தலீபான்கள் வெறிச்செயல்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மாலிஸ்டன் மாவட்டத்தில் தலீபான்கள் அப்பாவி மக்கள் 43 பேரை கொன்று குவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரச படைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள் 95% வெளியேற்றப்பட்டது. இதனால் தலிபான்கள் அதிகமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க தொடங்கினார்கள். அதன்படி, மாலிஸ்டன் மாவட்டத்தையும் கைப்பற்றினார்கள். அதனைத்தொடர்ந்து அங்கு வசித்த அப்பாவி பொதுமக்கள் 43 நபர்களை கொன்றுள்ளார்கள்.

இதேபோன்று பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் இது குறித்து மனித உரிமை செயல்பாட்டாளரான, மினா நாடேரி கூறுகையில், “மாலிஸ்டன்  மாவட்டத்தில் கொலைசெய்யப்பட்டவர்கள், அரசாங்க பணியாளர்கள் அல்லது பாதுகாப்பு படையினரோ கிடையாது, சாதாரண பொதுமக்கள்” என்று  கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகள் மாலிஸ்டன் மாவட்டத்திற்குள் புகுந்தது முதல் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |