ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்த படம் பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பை ஹர்பஜன் சிங் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.