Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கப்படவுள்ள பேச்சுவார்த்தை…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொது மக்களின் இயல்பு வாழ்க்கை…. முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்குமிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அங்குள்ள பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த திட்டமிட்ட அரசாங்கம் கத்தார் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டோலா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |