இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது .
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர் .
❌ Washington Sundar, Avesh Khan, Shubman Gill ruled out
🔹 Prithvi Shaw, Suryakumar Yadav named as replacementsIndia have made changes to their squad for the upcoming #ENGvIND tour 👇
— ICC (@ICC) July 26, 2021
இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா மற்றும் சூரிய குமார் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.