இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மலைப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனத்தின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்ததில், பெண் மருத்துவர் ஒருவர் உட்பட 9 சுற்றுலாப்பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 70 சுற்றுலா பயணிகள் சிட்குள் பகுதியில் சிக்கி உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அங்குள்ள சாலை மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாறை மோதி பாலம் உடைந்த காணொளி பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க செய்துள்ளது.