Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! ‘காசேதான் கடவுளடா’ பட ரீமேக்கில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

Image

மேலும் பிரியா ஆனந்த், ஊர்வசி, குக் வித் கோமாளி சிவாங்கி, மனோபாலா, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |