ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிசில் 2-வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரரான தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார் .
இதில் 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற கணக்கில் இந்திய வீரர் சரத் கமல் கைப்பற்றினார். இதன்மூலம் 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .