தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை tngasa.in, tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்ப பதிவு இதுவரை தொடங்கவில்லை. ஏனெனில் இரண்டு இணையதளங்களும் செயல்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.