Categories
தேசிய செய்திகள்

இனி சிம் கார்டு மாற்றுவது போலவே…. மின் இணைப்பையும் மாற்ற முடியும்…. எப்படி தெரியுமா?…..!!!!

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக விரைவில் 2021 ஆம் ஆண்டின் மின்சார திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் மின்சார திருத்த மசோதாவின் புதிய திருத்தப்பட்ட சட்டத்தின்படி நுகர்வோர் மொபைல் இணைப்பை போர்ட் செய்வதை போலவே மின்சார இணைப்பையும் மாற்றிக்கொள்ள முடியும். இதனால் மின் விநியோக நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிக்கும். அதனால் நுகர்வோருக்கு நேரடியாக பயன் அளிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய 17 மசோதாக்களில் மின்சாரம் திருத்த மசோதாவும் உள்ளது. இது நடந்தால்,  மின் விநியோகத் துறையில் ஒரு முக்கிய சீர்திருத்தமாக இருக்கும். இது நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும். புதிய திருத்தப்பட்ட மின்சாரச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், விநியோக வணிகத்திற்கான உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் அதிக அளவில் மின் விநோயோக நிறுவனங்கள் ஏற்படுத்தப்படலாம். இது தவிர, இந்த சட்டத்தின் கீழ் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை வலுப்படுத்துவதற்கான  அம்சம் இருக்கும்.

Categories

Tech |