ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரை ஜெட்டி பாலத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசு மசோதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமை தங்கியுள்ளார்.
இதனையடுத்து நகர் தலைவர் ஹமீது பைசல், விவசாய அணி மணிலா செயலாளர் முகமது அப்துல்லா, மணிலா பீச்சர் ஜஹாங்கீர் அரூஸி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.