சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரித்துள்ள அரண்மனை படத்தின் 3 ஆம் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை பேய் படத்தின் பாகம் 1 மற்றும் பாகம் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அரண்மனையின் 3 ஆம் பாகத்தை சுந்தர்சி இயக்கியுள்ளார்.
இதனை குஷ்பு தயாரித்துள்ள நிலையில் இந்தப் 3 ஆம் பாகத்தில் நடிகராக ஆர்யாவும், நடிகையாக ராஷிகன்னாவும் நடித்துள்ளார்கள். இதனையடுத்து இந்த அரண்மனை திரைப்படத்தின் 3 ஆம் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அரண்மனையில் 4 ஆம் பாகத்துக்கான திரைக்கதையை சுந்தர் சி தயார் செய்து விட்டதாகவும், கூடிய சீக்கிரமாக அதற்கான படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.