இங்கிலாந்து சுகாதார செயலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த தவறான கருத்தை பதிவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து சுகாதார செயலாளர் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகள் வந்தவுடனே அவர் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசி மிக அருமையாக செயல்பட்டு அதிலிருந்து தன்னை பூரணமாக குணமடைய செய்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுகாதார செயலாளர் பதிவிட்டுள்ளார்.
அதோடு மட்டுமின்றி கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதை விட அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து அனைவரது மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இவருடைய இந்த பதிவு ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் இருந்தவர்களை அவமானப்படுத்தியதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் சுகாதார செயலாளர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியதோடு மட்டுமின்றி இது தொடர்பாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.