Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது”… கமல் ஹாசன்..!!

இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.

Related image

 

இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன்  ‘ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |