Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில்  நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து  அதிர்ச்சியளித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில்  சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் .

இந்த போட்டியில்  ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  4-6, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். இதனால் இவரை எதிர்த்து மோதிய சொர்ரிபெஸ் டோர்மோ வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .

Categories

Tech |