சமுத்திரக்கனி அடுத்ததாக நடிக்கும் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் எம்.ஜி.ஆர் மகன், டான், ரைட்டர், தலைவி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமுத்திரக்கனி நடிப்பில் உருவான வெள்ளை யானை திரைப்படம் சமீபத்தில் நேரடியாக டிவியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கும் ‘யாவரும் வல்லவரே’ என்ற படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்தில் ரித்திவிகா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.