Categories
சினிமா

பாலியல் ஆசையை தூண்டும் படங்களை தான் எடுத்தார்…. நடிகை ஷில்பா ஷெட்டி….!!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா குற்றவாளி என நிரூபிக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து திடீரென போலீசார் அவரை கைது செய்தனர்.

இத்கிடையே நேற்று போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். வாக்கு மூலத்தில் தனது கணவர் ராஜ் குந்த்ரா நிரபராதி என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டி ஹாட்ஷாட்’களில் உள்ளடக்கத்தின் சரியான தன்மை குறித்து எனக்குத் தெரியாது.ஹாட்ஷாட்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களுக்கும், ஆபாச படங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை அவர் வலியுறுத்தினார், மேலும் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர். ராஜ் குந்த்ராவின் வியான் இன்டஸ்ட்டிரிஸ் நிறுவனமான இயக்குனராக நடிகை ஷில்பா ஷெட்டி செயல்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் அந்த பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |