Categories
உலக செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு பின்…. வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள நகரம்…. பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…!!

சீனாவில் பெய்துள்ள வரலாறு காணாத மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிகணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது 100o ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத அளவிற்கு பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெள்ளத்தில் சுமார் 75000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையினால் சுரங்கப்பாதைகள், உணவகங்கள், சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த கனமழைக்கு 12.4 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் ஹெனான் பகுதியில் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சாவோலின் போன்ற புத்த சரணாலயங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Categories

Tech |