Categories
உலக செய்திகள்

மனைவியை சந்தேகமடைந்த கணவர்…. கூட்டாளியுடன் சேர்ந்து செய்த வெறிச்செயல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

பாகிஸ்தானில் தனது மனைவி மற்றொருவருடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவர் அவருடைய கூட்டாளிகளுடன் ஒன்றாக சேர்ந்து கள்ளக்காதலனாக நினைத்தவரின் காது மற்றும் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு முகமது என்பவருடன் தகாத முறையில் உறவு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில் அப்துல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று வீட்டிற்குள் நுழைய இருந்த முகமதை தனியாக அழைத்து சென்றுள்ளார்கள்.

அதன்பின் அப்துல் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ஒன்றாக சேர்ந்து முகமதின் காது மற்றும் மூக்கை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்கள். இதனால் பலத்த காயமடைந்த முகம்மது தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் முகமதை கைது செய்து சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகளையும் தேடிவருகிறார்கள்.

Categories

Tech |