Categories
உலக செய்திகள்

“12 வயது சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தலாம்!”.. அமெரிக்க மருந்துகள் ஆணையம் பரிந்துரை..!!

ஐரோப்பிய மருந்து நிறுவனம், 12லிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு தான் செலுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் செலுத்தப்படுகிறது. மேலும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு செலுத்தலாமா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மாடர்னா தடுப்பூசி சுமார் 3600 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 18 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு ஏற்படும் எதிர்ப்புசக்தி, சிறுவர்களுக்கும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனையடுத்து மாடர்னா தடுப்பூசியை 12லிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அளிக்கலாம் என்று அமெரிக்காவின் மருந்துகள் நிறுவனம் பரிந்துரைத்தது. எனவே ஐரோப்பிய நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |