தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி ஆணையம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றது.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக இருக்கும் நிலையில் அதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக குறைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அரசு வேலையும் கிடைக்கும். தற்போது உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும் என்று கூறப்படுகின்றது.