உங்களுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்துவிட்டதா? ரெஸ்யூம் மட்டும் எடுத்துக்கொண்டு போனால் போதும் என்று நினைத்து விடாதீர்கள். கீழ்காணும் விவரங்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றது.
எந்தத் துறை சம்பந்தமான வேலைகள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை தயார் படுத்தவேண்டும். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை வீட்டிலேயே நீங்கள் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் செல்லும் நிறுவனத்தை பற்றி தகவலை இணையம் வழியாகவும், நண்பர்கள் மூலமாக தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அரை மணி நேரத்திற்கு முன்பாகவே செல்லுங்கள்.
இன்டர்வியூ நடக்கும் இடத்தை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் 10 மணி என்றால் சரியாக 10 மணிக்கு செல்லாமல் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே செல்லுங்கள். இதனால் மன உளைச்சல் இல்லாமல் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் பதிலளியுங்கள். அதேபோல் தெரியாத கேள்விகளுக்கு சுற்றி வளைக்காமல் இதற்கான பதில் தெரியவில்லை என ஒப்புக்கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி அனைத்து நேர்காணலிலும் தவறாமல் இருக்கும். கேட்க எளிதாக இருந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சிலருக்கு கடினமாக இருக்கும். உங்கள் கல்லூரி படிப்பு தொடங்கி நீங்கள் என்ன படித்தீர்கள், ஏன் இந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம், உங்களின் தனித் திறன்கள் மற்றும் இன்றைய வரையான சாதனைகள் என்று சுருக்கமாக சொல்லி முடியுங்கள்.
பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இன்டர்வியூ நடத்துகின்றனர். இதனால் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தங்களது உரையை தயார் செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நேர்காணல் செய்பவரிடம் அனுமதி கேட்டு தமிழில் பதிலளியுங்கள்.
இன்டர்வியூக்கு செல்லும்போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள். கேட்கப்படும் கேள்விக்கு புன்முறுவலுடன் பதில் கூறுங்கள். உங்கள் ஆடை அலுவலக சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
உங்களிடம் கேட்கப்படும் கேள்விக்கு சுருக்கமாக தெளிவாக பதில் கூறுங்கள். தேவையற்றதை பேசவேண்டாம். இன்டர்வியூவில் பொதுவாக கேட்கப்படும் ஒரே கேள்வி ஏன் பழைய வேலையை விடுகிறீர்கள்?
இப்படி கேட்கும்போது உண்மையை சொல்லும் பேர்வழி என நினைத்துக் கொண்டு உங்கள் பழைய அலுவலகத்தை பற்றி தவறாக பேசாதீர்கள். அவை உண்மையாக இருந்தாலும் கூட மாறாக தனிப்பட்ட காரணங்கள் அல்லது வேறு ஏதோ காரணங்கள் சொல்லி சமாளியுங்கள். இல்லாவிட்டால் இன்டர்வியூ எடுப்பவர்களிடம் உங்களைப்பற்றி மதிப்பு குறையுமே தவிர, கூடாது. ALL THE BEST.