Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! மொத்தமா 200 கிலோ கிராம் எடை…. 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு…. நெடுஞ்சாலையை மூடிய அதிகாரிகள்….!!

இங்கிலாந்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 200 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டும் போது கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கூகுள் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த நகரில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பள்ளத்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் எடையுடைய வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கட்டுமான பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அதனை செயலிழக்க செய்வதற்காக அப்பகுதி மக்களை வெளியேற செய்துள்ளார்கள்.

மேலும் அப்பகுதிக்கு மேலே செல்லும் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்ட தோடு மட்டுமின்றி M 62 என்னும் நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.

Categories

Tech |