ரஷ்யாவில் ஒரு சிறிய வகை விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவில் இருக்கும் Khabarovsk என்ற நகரத்தின் Kalinka விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. எனினும் சில வினாடிகளிலேயே அந்த விமானம் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/p/CRsSJk4opI5/
மற்றொரு நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திடீரென்று விமானம் விபத்தாக என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.