வேலங்குடி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து கூறியுள்ளார். அப்போது இந்த ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு போன்ற தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து வெள்ளக் குடியிலிருந்து வேலங்குடி வரை 4 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது.
அதன்பின் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறப்பதற்கான தயார் நிலையில் இருப்பதாக மகாலட்சுமி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊராட்சியில் 95 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் 250 நபர்களுக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.