Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : இந்தியாவின் முதல் பதக்கம் …. சாதனை படைத்த மீராபாய் சானு ….!!!

பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 117 கிலோ எடையைத் தூக்கி  2 -வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த பிரிவில் சீன வீராங்கனை  ஹூ ஜிஹுய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வீராங்கனை மீராபாய் சானு வென்றுள்ளார்.

Categories

Tech |