நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததால், பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மத்திய பிரதேசத்தை மையமாகக் கொண்ட மேற்கு இரயில்வே மண்டலத்தின் பிரிவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதன்படி 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நடைமேடை கட்டணம் தற்போது மீண்டும் பத்து ரூபாய்க்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.