நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பல்வேறு வகையில் ஒரு மாற்றம் அடைந்தாலோ, எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு வேகமாக பரவினாலோ இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் தரவுகளின் அடிப்படையில் மூன்றாவது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் அரசு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.