தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலோடு நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டெல்லியில் இன்று தலைமை தேர்தல் அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இதில் மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.