Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம்”…. டி 20 தொடரில் என்னை சேர்க்காதது பற்றி கவலையில்லை… குல்தீப் யாதவ் பேட்டி.!!

டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.   

இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் மற்றும் தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான  டி 20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் செய்ய கூடிய  பந்துவீச்சாளர் தேவை என்பதால் குல்தீப் மற்றும் சாஹலை சேர்க்காமல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் க்ருனால்  பாண்டியா  ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக  சொல்லப்படுகிறது.

Image result for I am not worried about picking me in the T20 series, Kuldeep Yadav said.

இந்நிலையில் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில்,  “குறுகிய வடிவிலான போட்டியில் இதுவரை சிறப்பாக விளையாடி இருக்கிறேன். இருந்தாலும் கடந்த 2 டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை. எனக்கு ஓய்வு தேவை என்று தேர்வாளர்கள்  நினைத்திருக்கலாம். அல்லது அணியில் சில மாற்றங்கள் தேவை என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் இப்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருப்பதை  நன்றாக செயல்படுவதற்கான வாய்ப்பாக  இதை தருகிறேன்.

Image result for I am not worried about picking me in the T20 series, Kuldeep Yadav said.

குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ச்சியாக விளையாடி விட்டு திடீரென டெஸ்டில் விளையாடும் போது அதில் உடனடியாக சாதிப்பது கொஞ்சம் கடினம் தான். அதற்கு கொஞ்சம் என கால அவகாசம் தேவை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் நான்,  அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள்  இடம்பிடித்துள்ளோம்.  சரியான கலவையில் அணிக்கு தேர்வு செய்வது கடினம் தான் என்றாலும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |