Categories
தேசிய செய்திகள்

பணக்காரர்களுக்கு என்று தனி சட்டம் இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து…!!!

பணக்காரர்களுக்கு என்று தனி ஒரு சட்டம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் மத்தியபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவின் கணவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமின் வேண்டும் என்று கோரி அக்கட்சியின் எம்எல்ஏ மனு அளித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்று தனியாக இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் குடி மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க, நீதித்துறை சுயாதீனமாக, பக்கசார்பற்ற நீதியை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |