தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத் துறையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.